உலகின் 3ம் செல்வந்தர் அதானி தற்போது 7ம் இடத்தில்

உலகின் 3ம் செல்வந்தர் அதானி தற்போது 7ம் இடத்தில்

இரண்டு தினங்களுக்கு முன் உலகின் 3ஆவது பெரிய செல்வந்தராக இருந்த அதானி தற்போது $48 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்து 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவரின் Adani Group வர்த்தகம் மீதான குற்றசாட்டுகள் காரணமாக இவர் கொண்டுள்ள பங்குகளின் பெறுமதிகள் குறைந்ததே அவர் 7ம் நிலைக்கு தள்ளப்பட காரணம். இரண்டு தினங்களுக்கு முன் Hindenburg Research அதானியின் மீது பல குளறுபடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

Adani Total நிறுவனம் பங்குச்சந்தை $13.0 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது. அது 24.76% வீழ்ச்சி.

Adani Transmission நிறுவனம் $10.2 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது. அது 27.08% வீழ்ச்சி.

Adani Enterprises நிறுவனம் $9.5 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது. அது 19.77% வீழ்ச்சி.

Adani Green நிறுவனம் $8.4 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது. அது 22.46% வீழ்ச்சி.

Adani Ports நிறுவனம் $4.4 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது. அது 21.58% வீழ்ச்சி.

அதானி நிறுவங்களுக்கு சுமார் $24.53 பில்லியன் கடன் உள்ளதாகவும் அதில் 40% இந்திய வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் என்றும் கூறப்படுகிறது.

அதானி நிறுவனம் 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் அண்மைய காலங்களிலேயே அது வேகமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்கு இந்திய பிரதமர் மோதியின் நட்பு பிராதன காரணம்.

கொழும்பு துறைமுகம் அரசியல் பின்னணி கொண்ட அதானிக்கு போட்டிகள் எதுவும் இன்றி வழங்கப்பட்டது.