உலகை மிரட்டும் சீக்க (Zika) வைரஸ்

Zika

உலகின் பல பாகங்களை, குறிப்பாக தென் அமெரிக்காவை, மிரட்டுகிறது சீக்க வைரஸ். ஐ.நாவின் சுகாதார அமைப்பான World Health Organization (WHO) இன்று இன்று தெரிவித்த கருத்துப்படி 3 முதல் 4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ்சால் பாதிக்கப்படலாம். நுளம்பால் காவப்படும் இந்த வைரஸ்சால் அதிகம் பாதிப்படைவது கருவுள் உள்ள குழந்தைகளே.
.
இந்த வைரஸ்ஸை காவும் நுளம்பு ஒன்று ஒரவரை கடித்தால் அந்த நபர் சீக்க வைரசின் பாதிப்புக்கு உள்ளாவார். ஆனால் அவர் பெரிய அளவில் நோய்க்குணம் எதையும் கொண்டிருக்க மாட்டார். காச்சல், தலையிடி போன்ற சிறு பாதிப்புக்களை மட்டுமே கொண்டிருப்பார். இவரை கடிக்கும் இன்னோர் நுளம்பு இந்த வைரசை மீண்டும் வேறு ஒருவருக்கு காவும்.
.
இந்த வைரஸ்சால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் பெரிதும் பாதிப்பு அடையாதுவிடினும் அவரின் வயிற்ருள் இருக்கும் குழந்தை பெரிதும் பாதிப்படையும். முக்கியமாக இக்குழந்தையின் தலை மிகவும் சிறிதாக இருக்கும். அவ்வகையில் பாதிக்கப்பட்ட குழந்தை பிற்காலத்தில் வேறு என்ன பாதிப்புக்களை அடையும் எனவும் யாரும் அறியார்.
.
தென் அமெரிக்க நாடான பிரேசில் இந்த வைரஸ்சால் அதிகம் பதிக்கப்பட்ட நாடாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவும் இந்த வைரஸ்சை கொண்டுள்ளன. இந்த வைரஸ்சால் பாதிக்கப்பட்டோர்க்கு தற்போது மருத்தவம் எதுவும் இல்லை.
.