ஊழலில் இலங்கை 36/100 புள்ளிகள் பெற்று 101ம் இடத்தில்

ஊழலில் இலங்கை 36/100 புள்ளிகள் பெற்று 101ம் இடத்தில்

Transparency International தயாரித்த 2022ம் ஆண்டுக்கான Corruption Perception Index என்ற ஊழல் அறிக்கையில் இலங்கை 36/100 புள்ளிகளை மட்டும் பெற்று 101ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன.

இந்த கணிப்பில் 0/100 புள்ளிகளை பெறும் நாடு முழு அளவில் ஊழல் நிறைந்த நாடாகவும், 100/100 புள்ளிகளை பெறும் நாடு ஊழல் அற்ற நாடாகவும் இருக்கும்.

டென்மார்க் 90/100 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்தும், பின்லாந்தும் 87/100 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளன.

பிரித்தானியா இம்முறை 73 புள்ளிகளை மட்டும் பெற்று 18ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியா 78/100 புள்ளிகளை பெற்று இருந்தது.

கனடா 74/100 புள்ளிகளை பெற்று 14ம் இடத்தில் உள்ளது.

அமெரிக்கா 69/100 புள்ளிகளை பெற்று 24ம் இடத்தில் உள்ளது.

சீனா 45/100 புள்ளிகளை பெற்று 65ம் இடத்தில் உள்ளது.

இந்தியா 40/100 புள்ளிகளை பெற்று 85ம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் 27/100 புள்ளிகளை பெற்று 140ம் இடத்தில் உள்ளது.

சோமாலியா 12/100 புள்ளிகளை மட்டும் பெற்று இறுதி 180ம் இடத்தில் உள்ளது.