ஊழல் நிறைந்த நைஜீரியா, ஒரு போலி அரச திணைக்களம் 

ஊழல் நிறைந்த நைஜீரியா, ஒரு போலி அரச திணைக்களம் 

கொஞ்சமாக கொள்ளையடித்தால் போதாது என்று மொத்தமாக கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நைஜீரியாவில் ஒரு போலியான அரச திணைக்களம் அமைக்கப்பட்டமை தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது.

Adeniyi Adeyemi என்பவர் தனக்கு அந்த நாட்டு சனாதிபதியால் Presidential Foreign Intervention Promotion Council (PFIPC) என்ற திணைக்களத்தின் Director-General பதவிக்கான கடிதம் வழங்கப்பட்டது என்று கூறி ஒரு அரச திணைக்களத்தையே இயக்கி வந்துள்ளார்.

உண்மையில் அந்த கடிதம் பொய்யானது என்றும், PFIPC திணைக்களமும் பொய்யானது என்று அரசு தற்போது கூறுகிறது. Adeyemi தற்போது தலைமறைவாகி உள்ளார்.

தலைமறைவாகி உள்ள Adeyemi தனது Director-General பதவிக்கான கடிதத்தை Dolapo Tanimola என்பவர் ஊடாக சனாதிபதியின் Chief of Staff பதவியில் உள்ள Femi Gbajabiamila என்பவரிடம் பெற்றதாக கூறியுள்ளார். Gbajabiamila அதை மறுக்கிறார். Tanimola 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி Hotel தீ விபத்து ஒன்றில் பலியாகினர் என்றும் கூறப்படுகிறது.

Gbajabiamila தன்னிடம் 400 மில்லியன் நைஜரிய நாணயத்தை இலஞ்சமாக பெற்றதாகவும், மேலும் 200 மில்லியன் கேட்டபோதே முரண்பாடு தோன்றியதாகவும் Adeyemi கூறியுள்ளார்.

Director-General பதவிக்கான கடிதம், திணைக்களம் ஆகியவை பொய்யானவை என்றாலும் அந்த திணைக்களத்துக்கு நைஜரிய அரசு 27.4 பில்லியன் நிதி ஒதுக்கி உள்ளது.