எரிபொருள் நிறுத்தம் Air India விமான விபத்துக்கு காரணம்?

எரிபொருள் நிறுத்தம் Air India விமான விபத்துக்கு காரணம்?

அண்மையில் இந்திய அகமதாபாத் விமான நிலையம் அருகே லண்டன் சென்ற Air India flight AI171 விபத்துக்கு உள்ளானதால் 260 பேர் பலியாகி இருந்தனர். இந்த விபத்தின் ஆரம்ப நிலை விசாரணை விமானத்தின் இரண்டு இயந்திரங்களுக்கான எரிபொருள் நிறுத்தப்பட்டமை காரணம் என்று கூறுகிறது.

இரண்டு இயந்திரங்களை கொண்ட இந்த விமானத்தின் இடது, வலது இயந்திரங்களுக்கான எரிபொருள் switch களும் ஒன்றின் பின் ஒன்றாக 1 நிமிடத்தில் RUN நிலையில் இருந்து CUTOFF நிலைக்கு திருப்பப்பட்டு உள்ளன.

விமானம் மேலே ஏறும்போது முன் நோக்கிய உந்தம் (thrust) மிக, மிக அவசியம்.

அப்போது ஒரு விமானி ஏன் cutoff செய்தாய் என்று கேட்டக தான் அவ்வாறு செய்யவில்லை என்று அடுத்த விமானி கூறியுள்ளார்.

உடனே switch கள் மீண்டும் RUN நிலைக்கு திருப்பப்பட்டாலும் விமானம் சில மீட்டர் உயரத்தில் இருந்ததால் இயந்திரங்கள் மீண்டும் இயங்கி தேவையான உந்தத்தை வழங்க போதிய நேரம் இருக்கவில்லை.

இந்த switch கள் தற்செயலாக off செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவை இரண்டு பாதுகாப்பு சட்டங்களுக்கு இடையில் உள்ளன.

இந்த விமானத்தின் முதலாவது விமானி, வயது 56, மொத்தம் 15,000 மணித்தியால விமானம் செலுத்தும் அனுபவத்தையும், இரண்டாம் விமானி, வயது 32, மொத்தம் 3,400 மணித்தியால அனுபவத்தையும் கொண்டு இருந்தனர்.

இந்த விமானத்தில் வேறு தவறுகள் இருந்ததாக இதுவரை அறியப்படவில்லை. விசாரணைகள்