ஐரோப்பாவின் முதல் பெரிய பொருளாதரா கூட்டாகியது சீனா

ஐரோப்பாவின் முதல் பெரிய பொருளாதரா கூட்டாகியது சீனா

2020ம் ஆண்டில் முதல் தடவையாக ஐரோப்பாவின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டு நாடாகி உள்ளது சீனா. இதுவரை அந்த தரத்தில் இருந்த அமெரிக்கா இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக ரம்பின் ஆட்சி காலத்திலேயே அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தக மற்றும் அரசியல் உறவுகள் பாதிக்கப்பட்டு இருந்தன.

2020ம் ஆண்டில் ஐரோப்பாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் $709 பில்லியன் ஆக இருந்துள்ளது. அதேவேளை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் $671 பில்லியன் ஆக இருந்துள்ளது.

2020ம் ஆண்டில் ஐரோப்பாவின் சீனாவிலிருந்தான இறக்குமதி 5.6% ஆல் அதிகரித்து உள்ளது. அத்துடன் சீனாவுக்கான ஏற்றுமதியும் 2.2% ஆல் அதிகரித்து உள்ளது.

ஆனால் ஐரோப்பாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 8.2% ஆல் குறைந்தும், அமெரிக்காவில் இருந்தன இறக்குமதி 13.2% ஆல் குறைந்தும் உள்ளன.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் கரோனா தடுப்பு மருந்துக்கு போட்டியிடும் வேளையில் சீனா 550,000 Sinopharm கரோனா தடுப்பு மருந்தை நேற்று ஐரோப்பிய நாடான Hungary க்கு வழங்கி உள்ளது. Hungary மேலும் 5 மில்லியன் சீன தடுப்பு மருந்தை கொள்வனவு செய்யவுள்ளது.

ஏற்கனவே Serbia வும் சீனா தடுப்பு மருந்தை மக்களுக்கு ஏற்றி வருகிறது. சீன மருந்து அங்கு 80% வெற்றியை அளிப்பதாக Serbia கூறியுள்ளது.