கடும் வெப்பம் தற்போது ஐரோப்பாவை தாக்கி வருகிறது. பிரான்சின் தலைநகர் பாரிஸில் வெப்பநிலை 40.3 C ஐ அடைந்துள்ளது. Bordeaux என்ற நகரில் வெப்பநிலை 43 C ஆகியுள்ளது.
பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளும் அதிகம் வெப்ப கொடுமைக்கு ஆளாகி உள்ளன.
பிரான்சில் கடும் வெப்பத்துக்கு 42 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
ஸ்பெயினின் Cantabria பகுதியில் வெப்பநிலை 43.7 C ஐ அடைந்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக பிரான்சில் சுமார் 6,000 பாடசாலைகள் மூடப்பட்டு அல்லது மாற்றங்களுக்கு உட்பட்டு உள்ளன.
பிரித்தானியாவின் Wiggonholt நகரில் வெப்பநிலை 35.8 C ஐ அடைந்துள்ளது.
