ஈரான் யுத்தத்தில் மாண்டுள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஈரான் விரைவில் ரம்ப் விருப்படியான தீர்மானங்களுக்கு இணங்காவிடின் தமது தாக்குதலின் பின் ஈரானில் எதுவும் மிஞ்சி இருக்காது (there won’t be anything left) என்று மீண்டும் மிரட்டியுள்ளார்.
ஈரான் ஹோர்முஸ் கப்பல் பாதையை முடக்கிய பின் ரம்ப் பல தடவைகள் இவ்வகை மிரட்டல்களை செய்துள்ளார். ஆனால் ரம்ப் தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்தாலும் அவரிடம் ஹோர்முஸ் பாதையை திறக்க இலகுவான வழி இல்லை.
ஈரானுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆனால் அமெரிக்காவுக்கும் UAE, சவுதி, கட்டார், பஹ்ரைன் போன்ற அரபு நண்பர்களுக்கும் இழக்க நிறைய உண்டு.
ரம்பின் சீன பயணமும் ஈரான் விசயத்தில் பயன் எதையும் அளிக்கவில்லை. நேட்டோ நாடுகளும் ஹோர்முஸ் விசயத்தில் தலையிட விரும்பவில்லை.
ரம்ப் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தால் ஈரானில் எஞ்சி உள்ள பொதுசன கட்டுமானங்களே தாக்கப்படும். அவ்வகை தாக்குதல் war crime ஆகும்.
