ஒரு அமெரிக்க கார் விலைக்கு சீனாவில் 5 சீன கார்கள்

ஒரு அமெரிக்க கார் விலைக்கு சீனாவில் 5 சீன கார்கள்

அமெரிக்காவில் இந்த ஆண்டு கார் ஒன்றின் சராசரி விலை $51,456 என்கிறது அமெரிக்காவின் Kelley Blue Book. ஆனால் சீனாவில் 100% மின்னில் இயங்கும் தரமான EV கார்கள் சில $10,000 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

சீன Geely EX2 வகை கார்களின் ஆரம்ப விலை $10,060 ஆக உள்ளது. சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் இது 100% மின்னில் இயங்கும் EV கார் ஆகும். இந்த கார் 400 km தூரம் செல்லக்கூடியது. இந்த கார் பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சீன Wuling நிறுவனத்தின் MiniEV யின் விலை $6,560 இல் ஆரம்பிக்கிறது. நகருக்குள் மட்டும் பயணிக்க இது சிறந்த கார்.

Wuling நிறுவனத்தின் சற்று பெரிய Bingo Pro காரின் விலை $8,000 இல் ஆரம்பிக்கிறது.

BYD நிறுவனத்தின் Seagull காரின் விலை $10,200 இல் ஆரம்பிக்கிறது. Seagull ஐரோப்பிய நாடுகளிலும் மிக பிரபலம் ஆனது.

கடந்த 12 மாதங்களில் $12,000 க்கும் குறைந்த விலை கொண்ட 700,000 EV கார்கள் சீனாவின் விற்பனை செய்யப்பட்டுள்ளன.