ஒரு தினத்தில் Tesla $80 பில்லியனை இழந்தது

ஒரு தினத்தில் Tesla $80 பில்லியனை இழந்தது

மின்சக்தியில் இயங்கும் (EV அல்லது electric vehicle) கார்களை தயாரிக்கும் அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் வியாழக்கிழமை $80 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது.

Tesla வின் CEO Elon Musk இந்த நிறுவனத்தின் வருங்கால விற்பனை குறைவடையும் என்று கூறியதால் வியாழன் Tesla வின் பங்குச்சந்தை பங்கு ஒவ்வொன்றும் 13% பெறுமதியை இழந்துள்ளன.

Elon Musk கின் பெறுமதியும் இந்த தினத்தில் $18 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இவரே தற்போதும் உலகின் முதலாவது செல்வந்தர்.

இந்த மாதத்தில் Tesla மொத்தம் $210 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது.

சீனாவின் BYD போன்ற EV தயாரிப்பு நிறுவனங்கள் Tesla வுக்கு பெரும் போட்டியாக அமைந்துள்ளன. இந்த போட்டியில் நிலைக்க Tesla தனது கார்களின் விலைகளையும் குறைக்க தள்ளப்பட்டுள்ளது.