கடந்த 2 ஆண்டில் 300,000 விசாக்களை அமெரிக்கா பறித்தது

கடந்த 2 ஆண்டில் 300,000 விசாக்களை அமெரிக்கா பறித்தது

அமெரிக்க சனாதிபதி ரம்பின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 300,000 க்கும் அதிகமான அமெரிக்க விசாக்கள் பறிக்கப்பட்டு உள்ளதாக (revoked) அமெரிக்க State Department செவ்வாய் கூறியுள்ளது.

கடந்த கடந்த ஜனவரி வரையான காலத்தில் 100,000 விசாக்களும், ஆகஸ்ட் 10ம் திகதி அறிவிப்பின்படி அக்காலம் வரை 175,000 விசாக்கள் பறிக்கப்பட்டு இருந்தன. தற்போது அத்தொகை 300,000 ஆக உயர்ந்துள்ளது.

விசா பறிக்கப்பட்டோரில் பெருமளவானோர் தமது இணைய பதிவுகளில் பலஸ்தீனருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிந்தமையே விசா பறிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவிப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்கிறது ரம்ப் அரசு.

விசா பறிக்கப்பட்டோரில் 25% மானோர் வன்முறைகளில் ஈடுபட்டனர் என்றும், 22% மானோர் மதுபோதையில் வாகனம் செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது.