கடவுள் உண்டா?

IsTheerAGodTamil

(இளவழகன், ஏப்ரல் 13, 2020)
 
கடவுள் உண்டா என்ற கேள்வி கேட்பதற்கு இலகுவானது, ஆனால் பதிலளிப்பதற்கு கடினமானது.
.
இந்த கேள்விக்கு பதிலளிக்க இலகுவான வழி, நேரடியாக பதிலளிப்பதற்கு பதியிலாக, சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகளை திருப்பி கேட்பதே. சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகள் கடவுள் உண்டா என்ற முதல் கேள்வியை கேட்டவரின் சிந்தனையை மேலும் ஆழமாக சிந்திக்க தூண்டும். மேலதிக பதில் கேள்விகள் இந்த விசயத்தில் பிரகாசமான தெளிவையும் வழங்கலாம்.
.
சிந்தனையை தூண்ட தொடுக்கப்படும் மேலதிக பதில் கேள்விகள் முற்றாக விஞ்ஞானத்தை அடிப்படியாக கொண்டதாகவும் இருக்கலாம். கடவுள் தொடர்பான சிந்தனையை தூண்ட விஞ்ஞானத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல என்றால் வேறு என்ன அணுகுமுறை புத்திசாலித்தனமாகும்?
.
தனி மனிதரை அடையாளம் காண நாம் பயன்படுத்தும் உயிரியல் அடையாளங்களை (biometric identifications) மட்டும் இங்கே கருத்தில் கொள்வோம். தற்காலங்களில் நீதிமன்றங்களும் இவ்வகை உயிரியல் அடையாளங்களை சட்டபடியான ஆதாரங்களாக ஏற்றுக்கொள்கின்றன. அத்துடன் பாதுகாப்பான நிலையங்களுக்கு அனுமதிகள் வழங்கவும், விமான நிலையங்களில் பயணிகளை அடையாளம் காணவும் இந்த உயிரியல் தனித்துவங்களை பயன்படுத்தப்படுகின்றன. Artificial Intelligent (AI) என்ற புதிய தொழிநுட்பங்களும் பிரதானமாக தனிமனித உயிரில் அடையாளங்களை அடிப்படையாக கொண்டவையே.
.
கைவிரல் அடையாளம் (fingerprint), கண்விழி அடையாளம் (iris), DNA (deoxyribonucleic acid), முக அடையாளம், கை நரம்புகளின் அடையாளம் என்பன தனி நபர் ஒருவரை அடையாளம் காண பயன்படும் தனிமனித அடையாளங்கள். ஆனால் நாம் அறியாத வேறு பல தனிமனித அடையாளங்களும் எம்முள் அமைந்து இருக்கலாம்.
.
மிக அதிகமாக பயன்படுத்தப்படுவது கைவிரல் அடையாளமே. விரலில் உள்ள வரைகள் மட்டுமே ஒருவரை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டாலும், உள்ளங்கையின் முழு பகுதியிலும் உள்ள வரைகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. இந்த அடையாளம் அந்நபரின் வாழ்நாள் முழுவதும் மாறாது நீடிப்பது. 1788 ஆம் ஆண்டில் Johann Andreas Mayer என்ற விஞ்ஞானி கைவிரல் அடையாளம் “never duplicate in two persons” என்று கூறி இருந்தார். மனிதர்கள் மட்டுமன்றி, gorillas, chimpanzees போன்ற மனித குடும்பத்தை சார்ந்த மிருகங்களும் தனித்துவமான கைவிரல் அடையாளங்களை கொண்டுள்ளன. இந்த குடும்பத்துக்கு அப்பால் koala என்ற மிருகங்களும்  தனித்துவமான கைவிரை அடையாளத்தை கொண்டுள்ளன.
.
1949 ஆம் ஆண்டில் பிரித்தானிய கண் ஆய்வாளர் James Hamilton Doggart மனிதரின் கைவிரல் அடையாளத்தைப்போல் கண் கருவிழிகளும் தனிமனித அடையாளத்தை கொண்டுள்ளன என்று கூறி இருந்தார். 1953 ஆம் ஆண்டு கண் ஆய்வாளர் Francis Heed Adler கைவிரல் அடையாளத்துக்கு பதிலாக கண்விழி அடையாளத்தை பயப்படுத்த கூறினார்.
.
DNA அடையாளத்தை 1869 ஆம் ஆண்டில் சுவிஸ் வைத்திய ஆய்வாளர் Friedrich Miescher முதலில் அறிமுகம் செய்திருந்தார். DNA விரைவில் மனிதரை இனம்காணும் இன்னோர் அடையாளமானது. உண்மையில் மனிதரில் மட்டும் அல்லாது உலகின் அனைத்து உயினங்களும் தமக்கு மட்டுமே உரிய தனித்துவமான DNA ஐ கொண்டுள்ளன. 1992 ஆம் ஆண்டு Denise Johnson என்பவரின் கொலையை விசாரித்த அமெரிக்காவின் Arizon பகுதி போலீசார் Palo Verde என்ற மரம் ஒன்றின் விதையின் DNA ஐ பயன்படுத்தி Mark Allen Bogan என்பவரை குற்றவாளி என்று நீதிமன்றில் நிரூபித்து இருந்தனர்.
.
முக அடையாத்தை பயன்படுத்தி நபர்களை நாம் அடையாளம் காணும் பழக்கம் நம்முள் நீண்டகாலமாக இருந்தாலும், கணனிகள் முக அடையாளத்தை பயன்படுத்தி தனிநபர்களை அடையாளம் காண்பது கணனிகளில் வளர்ச்சியின் பின்னரே நடைமுறைக்கு வந்துள்ளது. கருவிழிகள் மையங்களுக்கு இடையிலான தூரம், கண்களின் வெளிப்புற அந்தங்களுக்கு இடையிலான தூரம், அத்துடன் இவ்வாறானா அடையாளங்களுக்கு இடையிலான தூரம், கோணம் என்பன ஒவ்வருவருக்கும் தனித்துவமானது.
.
மேற்படி அடையாளங்களே மனிதரை, மிருகங்களை, மரங்ககளை சட்டப்படி அடையாளம் காண பயன்படுத்தப்படுகின்ற. ஒரு வெள்ளை வரிக்குதிரையில் காணப்படும் கருப்பு வரிகள் இன்னோர் வரிக்குதிரையில் காணப்படாது என்றும் விஞ்ஞானம் அறியும். ஒரு வண்ணத்து பூச்சியில் காணப்படும் பல்நிற அடையாளம் இன்னோர் வண்ணத்து பூச்சியில் காணப்படாது. ஒவ்வொரு சிறுத்தையில் காணப்படும் கருப்பு புள்ளிகள் மட்டுமல்ல, அவற்றின் வாலில் உள்ள கருப்பு வளையங்களும் தனித்துவமானவை. உயிரினங்களின் மணம், குரல் என்பனவற்றிலும் தனித்துவம் காணப்படுகின்றன. மனிதனால் காணமுடியாத, உணரமுடியாத வேறு பல தனித்துவங்களை இருக்கலாம்.
.
விளக்கத்தை சுருக்கமாக்க, இந்த உலகத்தில் (அல்லது எல்லா உலகங்களிலும்) உள்ள உரினங்கள் ஓவென்றும் குறைந்தது 10 தனித்துவ அடையாளங்களை கொண்டுள்ளன என்று கருதுவோம். அத்துடன் அவ்வாறான தனித்துவ அடையாளங்ககளை உயிரின் அடையாளங்கள் (soul’s identification matrix) என்றும் கூறுவோம்.
.
இப்போது கேளுங்கள், நாம் ஏன் இவ்வாறு ஒவ்வொரு உயிருக்கும், ஒன்றல்ல, பல தனித்துவங்களை கொண்டுள்ளோம்? எப்போது உயிர்கள் இவ்வாறு தனித்துவத்தை கொண்டிருக்க ஆரம்பித்தன? எவ்வாறு இந்த தனித்துவம் நடைமுறை செய்யப்படுகிறது? எங்கே இந்த தனித்துவம் கொண்டிருக்கப்படுகிறது. முக்கியமாக யார் இந்த தனித்துவ முறைமையை ஆரம்பித்தார்?
.
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் என்பற்றில் இருந்து பல்லாயிரம் விஞ்ஞானிகளை அழைத்து, அவர்களுக்கு பில்லியன்கள் டாலர் பணம் வழங்கி மேற்படி கேள்விகளுக்கு விடைகாண கேளுங்கள். நிச்சயமாக அவர்கள் விடை காணார், ஏனெறால் அவர்களால் விடை காண முடியாது.
.
ஏன் இவ்வாறு ஒவ்வொரு உயிரும் தனக்கு மட்டுமே உரிய தனித்துவத்தை கொண்டிருக்கின்றன என்ற கேள்விக்கான விடை டார்வினின் (Darwin) கூர்ப்பு கொள்கையின் உறுதிப்பாட்டை குறைக்கும். கை விரலில் உள்ள பள்ளங்களும், திட்டிகளும் கொண்ட வரைகள் உராய்வை அதிகரித்து கைபற்றலை உரமாக்க கூர்ப்பு செய்த செயல் எனலாம். ஆனால் ஏன் அந்த வரைகள் ஒவ்வொரு தனி நபருக்கும் தனியானதாக அமைகிறது? மர உச்சியில் உள்ள இலைகளை உன்ன முனைந்த மிருகத்தின் கழுத்து கூர்ப்பு முறையில் நீண்டு ஒட்டக சிவிங்கி உருவாகி இருக்கலாம். ஆனால் ஏன் அவ்வாறு நீண்ட கழுத்தில் தனித்துவமான புள்ளிகள் அமைகின்றன? டார்வின் எழுதிய “theory of evolution” என்ற கூர்ப்பு கொள்கை உடல் (physical) மாற்றத்தை மட்டுமே கருத்தில் கொள்வதால் அது “theory of physical evolution” என்று மாற்றி எழுதப்படல் வேண்டும். நாங்கள் Galapagos தீவு finch பறவைகளை ஆராயும் வேளையில் ஏன் அவற்றின் உயிரியல் தனித்துவத்தை விடுத்து, உடல் (மெய்) அமைப்பை மட்டும் ஆராய்வு செய்கிறோம்? உயிர்வாழ்வன குடும்பங்களாக பிரிக்கப்பட்ட (combinations) ஆனால் எண்ணிக்கை அற்ற தனித்துவங்கள் (permutation). உயிர்வாழ்வன பெருமளவில் இனப்பெருக்கம் அடைந்தாலும் அவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஏன் அவ்வாறு தனித்துவம் திடமாக அமைகிறது?
.
எப்போது உயிர்கள் ஒவ்வொன்றும் தனித்துவத்தை கொண்டிருக்க ஆரம்பித்தன என்ற கேள்வி விஞ்ஞானம் சார்பான ஒருவரையும் Big Bang கொள்கை மீது சந்தேகம் கொள்ள வைக்கும். Big Bang கொள்கை உண்மை என்று கருதினாலும், அதுதான் இயற்கையின் ஆரம்பம் என்று கருத முடியாது. மிகப்பெரும் வெடிப்பு ஒன்று எதிர்காலத்தில் தனித்துவமான உயிர்களை தோற்றுவிக்க தேவையான காரணியையும் (logic) கொண்டிருந்தது என்பது நம்ப இயலாதது.
.
எவ்வாறு உயிரினங்களின் தனித்துவம் அதுபோன்ற பிரதிகள் ஏற்படாவண்ணம் பாதுகாக்கப்படுகின்றன? ஒரு தாய் தன் வயிறில் ஒரு குழந்தையை வைத்திருக்கும்போதே அக்குழந்தைக்கும் தனித்துவமான கைவிரல் வரைகள் தோன்றுகின்றன. அந்த குழந்தை கருத்தடைக்கு உட்பட்டால் அக்குழந்தையின் கைவிரல் வரைகள் மீண்டும் வேறு குழந்தைக்கு பயன்படுத்தப்படுமா? அந்த தாய் குழந்தையை பெறும் நோக்கமே கொண்டிராவிடின் அவளின் குழந்தைகளின் கைவிரல் வரைகள் வேறு பெண்ணின் குழந்தைக்கு கிடைக்குமா? Dinosaurs களின் உயிரியல் தனித்துவங்களுக்கு என்ன நடந்தது? அவைகளும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டனவா?
.
எங்கே இந்த தனித்துவம் பேணப்படுகிறது. இந்த தனித்துவம் பூமியில் பேணப்படுகிறதா, அல்லது black hole இல் பேணப்படுகிறதா? அல்லது ஒவ்வொரு உயிரினதும் தனித்துவம் பேணப்படல் (logic) காலம் மற்றும் இடம் என்பவற்றில் தங்கியிராது செய்லபடும் திறன் கொண்டனவா?
.
இறுதியாக யார் இவற்றுக்கு எல்லாம் காரணம்?
.