கண்டுபிடிப்புகளில் இலங்கை 85ம் இடத்தில்

கண்டுபிடிப்புகளில் இலங்கை 85ம் இடத்தில்

World Intellectual Property Organization (WIPO) வெளியிட்ட இந்த ஆண்டுக்கான Global Innovation Index (GII 2022) சுட்டியில் இலங்கை 85ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 132 நாடுகள் இந்த கணிப்புக்கு உள்ளடக்கப்பட்டு இருந்தன.

முதலாம் இடத்தில் இந்த ஆண்டும் சுவிற்சர்லாந்து உள்ளது. 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளிலும் சுவிற்சர்லாந்தே முதலிடத்தில் இருந்துள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டு 6ம் இடத்தில் இருந்த அமெரிக்கா 2019ம், 2020ம், 2021ம் ஆண்டுகளில் 3ம் இடத்திலும் இருந்துள்ளது.

மூன்றாம் இடத்தில் சுவீடன் உள்ளன.

ஆசியாவில் தென்கொரியா 6ம் இடத்திலும், சிங்கப்பூர் 7ம் இடத்திலும், சீனா 11ம் இடத்திலும், ஜப்பான் 13ம் இடத்திலும், ஹாங்காங் 14ம் இடத்திலும் உள்ளன.

மலேசியா 36ம் இடத்தில் உள்ளது.

இந்தியா 40ம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் 87ம் இடத்தில் உள்ளது.

பங்களாதேசம் 102ம் இடத்தில் உள்ளது.

மொத்த கணிப்பில் சீனா 11ம் இடத்தில் இருந்தாலும், ‘knowledge and technology outputs’ பிரிவில் 6ம் இடத்தில் உள்ளது. மொத்த கணிப்பில் 40ம் இடத்தில் உள்ள இந்தியா ‘knowledge and technology outputs’ பிரிவில் இந்தியா 52ம் இடத்தில் உள்ளது.