கனடாவில் பண மற்றும் முதலீட்டு குற்றங்களை கண்காணிக்கும் Criminal Intelligence Service Canada என்ற அமைப்பு ஆண்டுதோறும் கனடாவின் பொருளாதாரத்தில் 5% பங்கு கருப்பு பணத்தை கழுவும் நோக்கத்தில் செய்யப்படுபவை என்றுள்ளது. இத்தொகை ஆண்டுக்கு சுமார் C$113 பில்லியன் ஆகும்.
நவம்பர் மாதம் 3 கிழமைகளாக உலக financial crime auditors கனடாவின் வங்கிகள், மற்றும் அரச திணைக்களங்களை விசாரணை செய்து வருகின்றனர். இதில் இலங்கை, இத்தாலி, ஹாங் காங், ஜப்பான், அஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஆய்வாளரும் அடங்குவர். வழமையில் விரைவாக முடியும் இவர்களின் விசாரணைகள் இம்முறை 3 கிழமைகள் நீடித்து உள்ளன.
Financial Action Task Force (FATF) அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவுக்கு பாதகமான அறிக்கையை வெளியிட்டால் அது கனடிய அரசுக்கும், கனடிய முதலீடுகளுக்கு பாதகமாக அமையும்.
கடந்த ஆண்டு மட்டும் கனடாவின் TD Bank கருப்பு பண கடத்தலுக்கு உதவியதால் $3 பில்லியன் குற்ற பணத்தை அமெரிக்கா புலனாய்வின் பின் செலுத்தி இருந்தது.
