கனடாவிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த பயணி ஒருவரிடம் இருந்து 44 kg hashish, 13 cocaine போதைகளை Toronto Pearson விமான நிலைய போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த போதைகள் 3 பயண பொதிகளில் இருந்துள்ளன. பொதிகளையும், போதைகளையும் போலீசார் காட்சிக்கு வைத்திருந்தனர்.
இந்த பயணி செப்டம்பர் மாதம் 3 திகதியே கைது செய்யப்பட்டு இருந்தாலும் 23ம் திகதியே இந்த அறிவிப்பை கனடிய போலீசார் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் விபரங்கள் இதுவரை போலீசாரால் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்டவர் தற்போது RCMP போலீசாரிடம் கையளிக்கப்பட்டு உள்ளார்.
