கனடாவில் காட்டுத்தீ, 90,000 இடம்பெயர்வு

CanadaWildFire

மே மாதம் முதலாம் திகதி முதல் வேகமாக பரவிவரும் பெரும் காட்டுத்தீ சுமார் 90,000 மக்களை இடம்பெயர வைத்துள்ளது. கனடாவின் Alberta மாகாணத்தில் உள்ள Fort McMurray என்ற நகருக்கு அண்மையிலேயே இந்த காட்டுத்தீ இடம்பெறுகிறது. அவ்விடத்தில் தற்போது அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்படுள்ளது.
.
இதுவரை சுமார் 1,600 கட்டடங்கள் இந்த தீக்கு இரையாகி உள்ளன. இந்த நகரில் இருந்து வெளியேற ஒரேயொரு பெரும்சாலை மட்டுமே இருப்பதால் அதுவும் நெருக்கடியில் உள்ளது. Beacon Hill என்ற சிறு குடியிருப்பின் 80% முற்றாக எரிந்துள்ளது என்று கூறப்படுள்ளது. இன்று புதன் வரை இந்த தீ 24,710 ஏக்கரை எரித்துள்ளது.
.
செவ்வாய்க்கிழமை 32.6C ஆக இருந்த வெப்பநிலை வியாழம், வெள்ளியளவில் 20C அளவுக்கு இறங்கக்கூடும் என்று காலநிலை தெரிவிக்கிறது. அது தீ பரவலை கட்டுப்படுத்த உதவும்.
.
Fort McMurray கனடாவின் பெற்றோலிய அகழ்வு இடமாகும். அங்குள்ள Northern Lights Regional Health Centre என்ற வைத்தியசாலையில் இருந்த 105 நோயாளிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
.

======