கனடாவில் இன்று திங்கள் இடம்பெற்ற தேர்தல் முடிபுகளின்படி மார்க் கார்னி தலைமையிலான லிபரல் (Liberal) கட்சி சிறுபான்மை ஆட்சி அமைக்கும்.
தற்போது முடிந்த வாக்கு எண்ணல்களின்படி லிபெரல் 131 ஆசனங்களை வென்றும், 31 ஆசனங்களில் முன்னணியிலும் உள்ளதால் இந்த கட்சி மொத்தம் 162 ஆசனங்களை பெறும் என்று கருதப்படுகிறது. அதேவேளை Conservative கட்சி 116 ஆசனங்களை வென்றும், 33 இல் முன்னணியிலும் உள்ளதால் 149 ஆசனங்களை பெறும் என்று கருதப்படுகிறது.
பெரும்பான்மை ஆட்சிக்கு 172 ஆசனங்கள் தேவை.
ஜஸ்டின் ரூடோ காலத்தில் 3ம் இடத்தில் இருந்த லிபரல், ரூடோ வெளியேறிய பின் மார்க் கார்னி தலைமையில் முதலாம் இடத்துக்கு வந்துள்ளது. ஆனாலும் பல கருத்து கணிப்புகள் கூறியதுபோல் லிபெரல் பெரும்பான்மை ஆட்சி அமைக்காது.
லிபெரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி தனது தொகுதியில் வென்று இருந்தாலும், Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre ரின் வெற்றி இதுவரை முடிவாகவில்லை. மொத்தம் 266 வாக்கெடுப்பு நிலையங்களில் 105 நிலையங்களின் முடிபுகள் வெளிவந்த நிலையில் Poilievre 45.1% வாக்குகளை பெற்று 2ம் இடத்தில் உள்ளார். லிபரல் காட்சியாளர் 51.4% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
NDP கட்சியின் தலைவர் Jagmeet Singh உம் தனது தொகுதியில் 18.5% வாக்குகளை மட்டும் பெற்று 3ம் இடத்தில் உள்ளார்.
ரூடோவுடன் முரண்பாடு கொண்டிருந்த Chrystia Freeland தனது தொகுதியில் வெற்றி அடைந்துள்ளார்.