கனடாவுக்கான ரம்பின் இறக்குமதி வரி 35% ஆக உயர்வு

கனடாவுக்கான ரம்பின் இறக்குமதி வரி 35% ஆக உயர்வு

இதுவரை 25% ஆக கூறப்பட்ட, NAFTA வுள் அடங்காத கனடிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க சனாதிபதி 35% ஆக அதிகரிப்பதாக வியாழன் கூறியுள்ளார். இந்த புதிய வரி ஆகஸ்ட் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

கனடா வரி பேச்சுக்களில் விரைவாக இயங்காமையும், கனடிய பிரதமர் செப்டம்பர் மாதம் பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொள்ள அறிவித்தமையுமே ரம்பின் மேற்படி மூர்க்கத்துக்கு காரணம்.

அத்துடன் கனடா மூலம் அமெரிக்காவுக்கு fentanyl என்ற போதை வருவதாக ரம்ப் பொய்யான குற்றமும் சுமத்தி வருகிறார். அமெரிக்கா வந்த மொத்த fentanyl லில் மிக சிறிய அளவான 0.2% fentanyl மட்டுமே கனடா ஊடாக வந்துள்ளது.

2024 மே முதல் 2025 மே வரையான காலத்தில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 10% ஆல் குறைந்துள்ளது என்கிறது தரவுகள்.

பதிலடியாக 50% இறக்குமதி வரியை அமெரிக்க இரும்பு மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு நடைமுறை செய்யுமாறு ஒன்ராறியோ முதல்வர் Doug Ford கேட்டுள்ளார்.

ரம்பின் புதிய வரிகள் சில:

 Bangladesh: from 37% to 20%
 India: from 26% to 25%
 Japan: from 24% to 15%
 Pakistan: from 29% to 19%
 South Korea: from 30% to 15%
 Sri Lanka: from 44% to 20%
 Switzerland: from 31% to 39%