கனடாவுடன் தொடரும் ரம்பின் இறக்குமதி வரி முரண்பாடு

கனடாவுடன் தொடரும் ரம்பின் இறக்குமதி வரி முரண்பாடு

அமெரிக்க சனாதிபதி ரம்ப் கனடாவுடனான வர்த்தக பேச்சுக்களை இடைநிறுத்தி கொள்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இம்முறை கனடா நடைமுறை செய்யவுள்ள Digital Service Tax (DST) அமெரிக்காவால் காரணம் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி ரம்ப்  மேலும் சில இறக்குமதி வரி தண்டனைகளை கனடாவுக்கு நடைமுறை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

முற்காலங்களில் பொருட்கள் மட்டுமே எல்லைகளை தாண்டி விற்பனை செய்யப்பட்டன. அதனால் இதுவரை பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி வரிகள் அறவிடப்பட்டன.

தற்காலங்களில் இணையம் மூலம் பெருமளவு சேவைகள் எல்லைகள் தாண்டி செய்யப்படுகின்றன. குறிப்பாக பெரும்தொகை விளம்பர வருமானங்கள் வரிகள் இன்றி அரவிடப்படுகின்றன. அவற்றுக்கும் இறக்குமதி வரி அறவிட பல நாடுகள் தற்போது முயற்சிக்கின்றன.

DST நடைமுறைக்கு வந்தால் Google, Apple, Microsoft, Meta, Amazon போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்களின் வருமானங்கள் குறையும்.

கடந்த ஆண்டு $349 பில்லியன் பெறுமதியான பொருட்கள் அமெரிக்காவில் இருந்து கனடா சென்றுள்ளன. அதேநேரம் $413 பில்லியன் பெறுமதியான பொருட்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளன. இவற்றில் இணையம் மூலமான சேவைகள் அடங்கா.