கனடா மீதான ரம்பின் வரிகளை முறியடித்த 6 ரம்ப் கட்சியினர்

கனடா மீதான ரம்பின் வரிகளை முறியடித்த 6 ரம்ப் கட்சியினர்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் கனடிய பொருட்கள் மீது திணித்த புதிய இறக்குமதி வரிகளை (tariffs) இரத்து செய்ய Democratic கட்சியினர் காங்கிரசில் வாக்கெடுப்புக்கு எடுத்த தீர்மானத்தை 6 Republican கட்சி உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தால் சில வரிகள் இரத்து செய்யப்படுகின்றன.

தனது கட்சியினர் தனது வரிக்கு எதிராக வாக்களித்தால் விசனம் கொண்டுள்ளார் ரம்ப். 

Thomas Massie (Kentucky மாநிலம்), Don Bacon (Nebraska மாநிலம்), Kevin Kiley (California மாநிலம்), Jeff Hurd (Colorado மாநிலம்), Brian Fitzpatrick (Pennsylvania மாநிலம்), Dan Newhouse (Washington மாநிலம்) ஆகியோரே ரம்பின் வரிக்கு எதிராக வாக்களித்தவர்கள்.

மெக்ஸிக்கோ மீதான ரம்பின் வரிகளை தடுக்கவும் Democratic கட்சி உறுப்பினர் ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்தவுள்ளனர். மேற்படி 6 Republican உறுப்பினர்களும் மெக்ஸிக்கோ வாக்கெடுப்பில் எப்படி வாக்களிப்பர் என்று இதுவரை கூறவில்லை.