கனடாவின் Toronto நகர் பகுதியில் 9 போலீசார் புதன்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பழுதான வாகனங்களை இழுத்து செல்லும் Tow Truck குழுக்களுடன் இணைந்து சட்டவிரோத செயல்களை செய்ததாகவும், குறி வைக்கப்படும் போலீஸ் உயர் அதிகாரிகளின் விலாசங்களை வன்முறை கும்பல்களுக்கு வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.
தமது unit commander ஐ படுகொலை செய்ய முயன்றவர்க்கு சில போலீசார் உதவியது மிகப்பெரும் குற்றமாகும்.
கைது செய்யப்பட்ட போலீசாரின் பெயர் விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவர்களில் இருவர் புதன்கிழமை நீதிமன்றுக்கு எடுத்து வரப்பட்டு உள்ளனர்.
Toronto நகருக்கு வடக்கே உள்ள புறநகரான York Regional போலீசாரே மேற்படி விசாரணையை செய்கின்றனர்.
Toronto நேரப்படி வியாழன் காலை 10:00 மணிக்கு மேலதிக விபரங்கள் வழங்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
கனடாவில் நகர போலீசார், மாநில போலீசார், மத்திய போலீசார் (RCMP) ஆகிய 3 மட்டங்களில் போலீஸ் பிரிவுகள் உள்ளன.
