அமெரிக்க Gulfstreams என்ற விமான தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் business jet களை கனடா உடனடியாக certify செய்யாவிடில் தான் கனடாவின் Bombardier போன்ற விமான தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் Global Express போன்ற விமானங்களை decertify செய்யவுள்ளதாகவும், கனடிய விமானங்களுக்கு 50% இறக்குமதி வரி அறவிடவுள்ளதாகவும் அமெரிக்க சனாதிபதி ரம்ப் வியாழன் மிரட்டியுள்ளார்.
விமானங்களுக்கான certificate தொழிநுட்ப ஆராய்வுகளின் பின் வழங்கப்படுவது. அது ஒரு அரசியல்வாதி வழங்கும் சான்றிதழ் அல்ல. அப்படியாயின் எவ்வாறு ரம்ப் அதை திருப்பி பறிக்க முடியும்? அமெரிக்காவில் விமான certificate களை வழங்குவது அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) என்ற திணைக்களமே.
அத்துடன் பெருமளவு கனடிய விமானங்கள் அமெரிக்காராலும், அமெரிக்க விமான சேவை நிறுவனங்களாலும் கொள்வனவு செய்யப்பட்டு தற்போது பாவனையில் உள்ளன. அவற்றை உடனடியாக கைவிட முடியுமா?
கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்தால் தான் கனடிய பொருட்கள் மீது 100% வரி நடைமுறை செய்வேன் என்றும் சில தினங்களுக்கு முன் ரம்ப் மிரட்டி இருந்தார்.
முன்னர் அமெரிக்கா கனடாவின் Bombardier தயாரித்த C Series என்ற சிறிய பயணிகள் விமானத்துக்கு 300% வரி விதித்ததால் அதை Bombardier ஐரோப்பாவின் Airbus நிறுவனத்துக்கு விற்பனை செய்திருந்தது.
