கரோனா மத்தியில் Tokyo 2020 நிறைவு பெற்றது

கரோனா மத்தியில் Tokyo 2020 நிறைவு பெற்றது

கரோனா வைரசின் தாக்கத்தின் மத்தியில், ஒரு ஆண்டு காலம் பின் தள்ளப்பட்ட Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஞாயிறு நிறைவு பெற்றன.

அமெரிக்கா 39 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 113 பதக்கங்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆனாலும் அமெரிக்கா எதிர்பார்த்ததிலும் 16 பதக்கங்கள் குறைவாகவே பெற்று உள்ளது.

சீனா இறுதிவரை அதிக தங்க பதக்கங்களை கொண்டிருந்தாலும் இறுதி நாளில் அமெரிக்கா ஒரு தங்க பதக்கத்தை சீனாவிலும் அதிகமாக பெற்று உள்ளது. சீனா எதிர்பார்த்ததிலும் 5 பதக்கங்கள் அதிகமாக பெற்று உள்ளது.

ஜப்பான் 27 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 58 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. ஜப்பானும் எதிர்பார்த்ததிலும் 14 பதக்கங்கள் குறைவாக பெற்று உள்ளது.

பிரித்தானியா 22 தங்க பதக்கங்கள் உட்பட 65 பதக்கங்கள் பெற்று உள்ளது.

ஊக்கிவிப்பு போதை பயன்படுத்தல் காரணமாக ரஷ்யா போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டு இருந்தாலும், ரஷ்ய வீரர்கள் Russian Olympic Committee என்ற அணியின் கீழ், ரஷ்ய கொடி இன்றி போட்டியிட்டு இருந்தனர். அவர்கள் 20 தங்க பதக்கங்கள் உட்பட 71 பதக்கங்கள் பெற்று உள்ளனர். ரஷ்யா எதிர்பார்த்ததிலும் 18 அதிக பதக்கங்களை பெற்று உள்ளது.

இந்தியா 7 பதக்கங்கள் பெற்று உள்ளது. இத்தொகை எதிர்பார்த்ததிலும் 4 பதக்கங்கள் அதிகம்.

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் இடம்பெறும்.