இதுவரை காலமும் காசா யுத்தத்தில் அகப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஐ.நாவும் அதனுடன் இணைந்த தொண்டர் நிறுவனங்களுமே உணவு, மருந்து போன்ற அவசிய உதவிகளை வழங்கி வந்தன. ஆனால் அவ்வகை உதவி வழங்களை பறித்து இராணுவ மயமாக்க முனைகிறது Gaza Humanitarian Foundation (GHF) என்ற அமெரிக்க-இஸ்ரேல் அமைப்பு. இந்த அமைப்பை ஐ.நா. நிராகரித்து உள்ளது.
GHF அமைப்பு திங்கள் தாம் சிலருக்கு உதவிகளை வழங்கியதாக அறிக்கை விட்டிருந்தது. ஆனால் அந்த வழங்கல் எப்போது, எந்த இடத்தில் செய்யப்பட்டது என்று கூற GHF மறுத்துவிட்டது. சிலர் பொதிகளை காவும் படத்தை மட்டும் வெளியிட்டு உள்ளது. அந்த படமும் பின்புறம் இருந்து எடுக்கப்பட்டது. அதனால் பொதிகளை காவுவோர் யார் என்பது அறியப்படாது.
GHF தாம் காசாவின் தெற்கு பகுதியில் 4 உதவி வழங்கும் நிலையங்களை கொண்டுள்ளதாகவும், உதவி தேவைப்படுவோர் அங்கு சென்று உதவிகளை பெறவேண்டும் என்றும் கூறுகிறது.
GHF க்கு பொறுப்பாக இருந்த Jake Wood என்ற அமெரிக்க அதிகாரி GHF சுதந்திரமாக இயங்க முடியாது என்று கூறி தனது பதவியை விட்டு நீங்கி உள்ளார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் GHF ஐ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அதற்கான உதவி பொருட்களை அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ வழங்கா. முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் உதவி பொருட்களை வழங்கும் என்று கூறப்பட்டாலும் அதுவும் தெளிவில்லை.