காசா மற்றும் West Bank ஆகிய இடங்களில் இஸ்ரேல் செய்யும் யுத்த குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. அதிகாரியான Francesca Albanese மீது அமெரிக்க ரம்ப் அரசு புதன்கிழமை தடை விதித்துள்ளது. இவர் International Criminal Court (ICC) சார்பிலேயே காசா விசாரணையை செய்கிறார்.
இஸ்ரேல் செய்யும் குற்றங்களை ICC விசாரணை செய்ய முடியாது என்பதே அமெரிக்காவின் கொள்கை.
இத்தாலியரான Albanese கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காசா யுத்தத்தில் இலாபம் அடையும் அமெரிக்க நிறுவனங்களை விசாரணை செய்யவும் கேட்டிருந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேல் காசாவில் genocide செய்தற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக Albanese கூறியிருந்தார்.
ICC இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு மீது கடந்த நவம்பர் மாதம் கைதுக்கான கட்டளையை அறிவித்து இருந்தது. ஆனாலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அமெரிக்கா Albanese யின் பதவியை பறிக்க கடுமையாக முயற்சி செய்திருந்தாலும், அம்முயற்சி பலன் அளிக்கவில்லை.