காசா யுத்த நிறுத்த தீர்மானத்தை 5ம் தடவையும் தடுத்த அமெரிக்கா 

காசா யுத்த நிறுத்த தீர்மானத்தை 5ம் தடவையும் தடுத்த அமெரிக்கா 

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ வாக்கு மூலம் தடுத்துள்ளது.

மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையில் 14 நாடுகள் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்து உள்ளது.

வீட்டோ வாக்கு உரிமை கொண்ட பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 4 நாடுகளும், ஏனைய 10 நாடுகளும் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளன.

கடந்த 11 கிழமைகளாக இஸ்ரேல் காசாவுக்கு செல்லும் உணவு, மருந்து போன்ற அவசிய பொருட்களையும் தடுத்து வருகிறது.