காசா குண்டு வீச்சுகளில் இருந்து தப்பிய பல்லாயிரம் வீடுகளை, பாடசாலைகளை, அரச நிலையங்களை இஸ்ரேல் அழித்து தரை மட்டம் ஆக்கி வருகிறது. இவை இஸ்ரேல் மார்ச் மாதம் யுத்த நிறுத்தத்தில் இருந்து முறித்துக்கொண்டு பின்னரே planned demolitions மூலம் அழிக்கப்பட்டு உள்ளன.
பலஸ்தீனர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி செல்வதை தடுக்கும் நோக்கிலேயே இஸ்ரேல் இந்த திட்டமிட்ட operation control அழிப்பை செய்கிறது.
இஸ்ரேலின் இச்செயலும் சந்தேகத்துக்கு இடமின்றி war crime ஆகும். முன்னாள் Ehud Olmert என்ற முன்னாள் இஸ்ரேல் பிரதமரும் இஸ்ரேல் பலஸ்தீனருக்கு ஹிட்லர் யூதர்களுக்கு கட்டியது போன்ற concentration camp களை பலஸ்தீனருக்கு கட்ட முனைகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Rafah நகரில் உள்ள Tel al-Sultan என்ற இடத்தில் பலஸ்தீன பாடசாலை ஒன்றை இஸ்ரேல் அழிப்பது வீடியோ மூலம் வெளிவந்துள்ளது. பல படங்கள் Planet Lab செய்மதி மூலம் பகிரங்கம் செய்யப்பட்டுள்ளன.


காசாவில் இந்த அழிப்பை செய்ய ஆட்களை தேடி இஸ்ரேலில் விளம்பரங்களும் செய்யப்பட்டு உள்ளன.

படங்கள்: Planet Labs