ஏற்கனவே காலவதியான அல்லது விரைவில் காலவதி ஆக உள்ள இந்திய உணவு பொருட்களில் பதியப்பட்டுள்ள காலவதி திகதியை (expiry date) இரசாயனம் மூலம் அழித்து அவ்விடத்தில் பொய்யான காலவதி திகதி பதித்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன சில இந்திய நிறுவனங்கள்.
மேற்படி நிறுவனங்களிடம் இருந்து பொய் காலவதி திகதியை கொண்ட $80,000 பெறுமதியான உணவு பொருட்களை மும்பை நகரை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்து Food and Drug Administration திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் PepsiCo நிறுவனத்தின் Lay’s chips, Nestle நிறுவனத்தின் Maggi Noodles, Unilever நிறுவனத்தின் Knorr Soup, Coca-Cola நிறுவனத்தின் Thums Up களும் அடங்கும்.
Sadhana Enterprises என்ற நிறுவனத்திடம் இருந்தே மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டாலும் அவை வேறு 19 ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சில பொருட்களில் பொய் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பதியப்பட்டு இருந்ததால் அவை கனடா போன்ற bilingual நாடு ஒன்றுக்கு தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
