கியூபாவில் சீன இலத்திரனியல் உளவு நிலையம்?

கியூபாவில் சீன இலத்திரனியல் உளவு நிலையம்?

கியூபாவில் தனது இலத்திரனியல் உளவு நிலையம் ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக அமெரிக்காவின் The Wall Street Journal இன்று வியாழன் கூறியுள்ளது. சீனாவின் இந்த நிலையம் அமெரிக்காவை உளவு பார்க்க பயன்படலாம்.

அமெரிக்காவின் Tampa நகரில் உள்ள Central Command தலைமையகம், North Carolina மாநிலத்தில் உள்ள Fort Liberty போன்ற அமெரிக்க படைகளின் தளங்கள் கியூபாவில் இருந்து வெகு தூரத்தில் இல்லை.

இவ்வகை உளவு பார்க்கும் நிலையம் ஈமெயில் பரிமாற்றம், செய்மதி தொடர்புகள், தொலைபேசி தொடர்புகள், ஏனைய இலத்திரனியல் தொடர்புகள் ஆகியவற்றை ஒட்டுக்கேட்க உதவும்.

இந்த வசதியை அடைய சீனா பல பில்லியன் டாலர்களை கியூபாவுக்கு வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.