கியூபா சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல், அமெரிக்கா தடுக்கவில்லை 

கியூபா சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல், அமெரிக்கா தடுக்கவில்லை 

Anatoly Kolodkin என்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் 730,000 பரல்கள் எரிபொருளுடன் செவ்வாய் கியூபாவை அடைந்துள்ளது. இதுவரை கியூபா மீது எரிபொருள் தடையை நடைமுறை செய்திருந்த அமெரிக்கா ரஷ்யாவுடன் மோத விரும்பவில்லை.

கடந்த 3 மாதங்களில் கியூபா பெறும் முதல் எரிபொருள் கப்பல் இதுவே. இதை சுத்திகரிக்க மேலும் சில தினங்கள் தேவைப்படும்.

இதுவரை கியூபா தனக்கு தேவையான எரிபொருளை வெனேசுஏலாவில் இருந்தே பெற்றது. ஆனால் அதை அமெரிக்கா ஆக்கிரமித்த பின் அங்கிருந்து கியூபாவுக்கு எரிபொருள் செல்வதை தடை செய்திருந்தது.

வெனேசுஏலா, ஈரான் ஆகியவற்றுக்கு பின் கியூபாவை தான் ஆக்கிரமிக்க உள்ளதாக ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் இவர் தற்போது ஈரானில் மாண்டுள்ளார்.