குகைக்குள் தொலைந்த 13 பேரும் உயிருடன்

Thailand

ஜூன் மாதம் 23 ஆம் திகதி, 9 நாட்களுக்கு முன்னர், தாய்லாந்தில் உள்ள Tham Luang Nang Non என்ற நிலக்கீழ் குகை ஒன்றை பார்வையிட சென்ற கால்பந்தாட்ட குழு ஒன்றின் அங்கத்துவ இளைஞர்களும் (11 வயது முதல் 16 வயது வரை), அவர்களின் பயிற்சியாளரும் (25 வயது) இதுவரை தொலைந்து இருந்தனர். அவர்களின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளார்.
.
இவர்கள் 10 km நீளம் கொண்ட இந்த குகைக்குள் சென்ற காலத்தில் அப்பகுதியில் கடும் மழை பொழிந்துள்ளது. அதனால் குகையின் பல பாகங்கள் நீரால் நிறைந்து மனித நடமாட்டத்தை துண்டித்தது. அதனாலேயே இவர்கள் குகைக்குள்ளே அகப்பட்டு கொண்டனர் என்று கூறப்படுகிறது.
.
சீனா, ஆஸ்ரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவிகளுடன் தாய்லாந்தின் படைகள், நீர் மூழ்கிகளின் உதவி கொண்டு, தொலைந்தவர்களை தேடும் பணியில் இறங்கின. கடுமையான தேடுதலின் பின் தொலைந்தவர்களின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
.

தொலைந்தவர்களை குகைக்கு வெளியே எடுக்கும் வேலைப்பாடுகள் தற்போது நடைபெறுகின்றன. குகையுள் உள்ள நீரை முதலில் வெளியே எடுத்து, அதன் பின்னரே அகப்பட்டவர்களை வெளியே எடுப்பது சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.
.