கனடா தீடீரென உள்வாங்கும் வெளிநாட்டவர் தொகையை குறைத்தால் ஜூலை மாதம் முதலான 3ம் காலாண்டில் கனடாவின் சனத்தொகை 76,068 பேரால் குறைந்து உள்ளது என்று Statistics Canada இன்று புதன் கூறியுள்ளது.
மேற்படி குடிவரவு குறைப்பில் தற்காலிக வேலைவாய்ப்பு விசா குறைப்பு, மாணவ விசா குறைப்பு ஆகியனவும் அடங்கும். இவர்களின் வரவு (குறைந்தது ஆரம்பத்தில்) குடியுரிமை அற்ற தற்காலிக வரவு என்றாலும், கனடாவில் வாழும் குடியுரிமை அற்றோரும் சனத்தொகையில் உள்ளங்கும்.
2022ம் ஆண்டில் ரூடோ அரசு தாராள குடிவரவை நடைமுறை செய்ததால் சனத்தொகை 1 மில்லியன் ஆல் அதிகரித்து இருந்தது. 2023ம் ஆண்டில் மொத்த கனடிய சனத்தொகை அதிகரிப்பின் 97% பங்கு குடிவரவாளர்களினால் நிரப்பப்பட்டு இருந்தது.
2026ம் ஆண்டு கனடா 673,650 வெளிநாட்டவரை உள்வாங்க திட்டம் கொண்டிருந்தாலும், தற்போது அத்தொகை 385,000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. பின் வரும் 2027ம், 2028ம் ஆண்டுகளில் 370,000 பேரை மட்டுமே கனடா உள்வாங்கும்.
கனேடியர்கள் பிள்ளை பெற மறுப்பதாலும், குடிவரவு குறைக்கப்படுவதாலும் கனடாவின் சனத்தொகை தொடர்ந்தும் நலிவடைந்து செல்லலாம்.
