கைதிகளின் குதத்துள் CIA குழாய் செலுத்தி துன்புறுத்தல்

கைதிகளின் குதத்துள் CIA குழாய் செலுத்தி துன்புறுத்தல்

கியூபாவில் உள்ள Guantanamo Bay என்ற அமெரிக்க இராணுவ தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளின் குதங்களில் குழாய் செலுத்தி துன்புறுத்திய உண்மை தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் பரிசோதனை செய்த Dr. Sondra Crosby என்ற வைத்தியரே இந்த உண்மையை நீதிமன்றில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதலின் பின் பெருமளவு இஸ்லாமியர் பல சட்டவிரோத வதை முகாம்களில் வைத்து அமெரிக்க CIA உளவு பிரிவால் வதை செய்யப்பட்டு இருந்தனர். அதில் Abd al-Rahim al-Nasiri என்பவர் 2000ம் ஆண்டு USS Cole என்ற அமெரிக்க கப்பலை தாக்கிய திட்டத்தை வகுத்திருந்தார் என்று கூறி கைது செய்யப்பட்டு Guantanamo Bay முகாமில் வதை செய்யப்பட்டார்.

Guantanamo Bay யில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த al-Nasiri யின் குதத்துள் CIA குழாய் ஒன்றை செலுத்தி துன்புறுத்தி விசாரணை செய்ததாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதலில் அதற்கு பதிலளித்த CIA தாம் உணவை rectal feeding மூலம் செய்ததாக கூறியுள்ளது. ஆனால் CIA பின்னர் இது தொடர்பாக கருத்து கூற மறுத்துள்ளது.

தொண்டை பகுதியில் குழாய் மூலம் செலுத்தப்படும் உணவு குடல் வழியே சென்று செமிபாடு அடையும். ஆனால் குதத்தில் செலுத்தப்படும் உணவு மேலே சென்று செமிபாடு அடையாது. CIA உணவை செலுத்தியது தமது வதை செயலை வைத்திய நடவடிக்கை என்று மூடி மறைக்கவே என்று நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது.

Dr. Crosby தனது கூற்றில் “This is a very distressing painful, shameful stigmatizing event” என்று விபரித்துள்ளார்.

கைதிகளை அமெரிக்காவுக்குள் எடுத்து சென்றால் சித்திரவதைகள் செய்வது ஆபத்தாகலாம் என்ற காரணத்தாலேயே கைதிகள் அமெரிக்க சட்டத்துக்கு வெளியேயான Guantanamo Bay முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டனர்.