அஸ்ரேலியாவின் மலிவு விலை (low-cost) விமான சேவையான Jetstar 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் அஸ்ரேலியாவின் மெல்பேர்ன் (Melbourne) நகருக்கும் கொழும்புக்கும் இடையில் கிழமைக்கு 3 நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது.
செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ள இந்த சேவைக்கு Jetstar புதிதாக வடிவமைக்கப்பட்ட தனது wide-body Boeing 787 Dreamliner விமானங்களை பயன்படுத்த உள்ளது.

ஆரம்பத்தில் சிறுதொகை ஒருவழி பயண கட்டணம் A$315 ஆக இருந்தாலும் தற்போது ஒருவழி கட்டணம் A$384 வரைக்கு அதிகரித்து உள்ளது.
இந்த புதிய சேவை ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 100,000 மலிவு விலை ஆசனங்களை விற்பனைக்கு விடுவதால் அஸ்ரேலியாவுக்குக்கான விமான பயண செலவு குறைவடையும்.
