சனாதிபதி சீ, பிரதமர் மோதி உறவு உச்சத்தில்

சனாதிபதி சீ, பிரதமர் மோதி உறவு உச்சத்தில்

Shanghai Cooperation Organization (SCO) என்ற அமைப்பின் அமர்வுக்கு சீன நகரமான Tianjin சென்ற இந்திய பிரதமர் மோதிக்கும் சீன சனாதிபதி சீக்கும் இடையில் உறவு உச்சத்தை அடைந்துள்ளது.

சனாதிபதி சீ இந்தியாவும், சீனாவும் நண்பர்களாக இருப்பது சரியான தெரிவு (right choice) என்று கூறியுள்ளார்.

சீயின் கூற்றுக்கு பதிலளித்த மோதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை இந்தியா இருதரப்பு நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் (mutual trust and respect) முன்னெடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.

2020ம் ஆண்டு இமாலய எல்லையோரம் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இந்திய-சீன உறவு முறிந்து இருந்தாலும், அமெரிக்க சனாதிபதி இந்தியா மீது திணித்த 50% இறக்குமதி வரியினால் விசனம் கொண்ட மோதி சீனாவை நெருங்குகிறார்.

சீ, பூட்டின், மோதி ஒன்றாக இணைவதை அமெரிக்காவோ, மேற்கோ விரும்பா. மோதியை மீண்டும் வெளியே இழுக்க அமெரிக்கா முயற்சிக்கும்.