சவுதிக்கு 8,000 பாகிஸ்தான் படைகள், யுத்த விமானங்கள் 

சவுதிக்கு 8,000 பாகிஸ்தான் படைகள், யுத்த விமானங்கள் 

பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு 8,000 படைகளையும், மொத்தம் 16 (ஒரு squadron) JF-17 யுத்த விமானங்களையும், சீனா தயாரித்த HQ-9 வகை வான் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் அனுப்பி உள்ளது.

தேவைப்பட்டால் மேலும் படைகளை பாகிஸ்தான் சவுதிக்கு அனுப்பவும் இணங்கியுள்ளது.

பாகிஸ்தானும், சவுதியும் கடந்த ஆண்டு பாதுகாப்பு இணக்கம் ஒன்றை செய்திருந்தன. அதற்கு அமையவே இந்த படை நகர்வு செய்யப்பட்டுள்ளது.

சவுதி சென்ற இந்த பாகிஸ்தான் படைகள் ஈரான் சவுதியை தாக்கினால் சவுதிக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே சென்றுள்ளன. மறுபுறம் பாகிஸ்தான் ஈரானின் நட்பு நாடாகவும் இயங்கி வருகிறது.

சவுதிக்கும், UAEக்கும் இடையில் அண்மையில் முறுகல் நிலை அதிகரித்தபோது UAE பாகிஸ்தானிடம் தனது $3.5 பில்லியன் கடனை திருப்பி தருமாறு கேட்டது. உடனே சவுதி அத்தொகையை பாகிஸ்தானுக்கு வழங்கியது.

அதேவேளை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சமாதான பேச்சுக்களையும் பாகிஸ்தான் முன்னெடுக்கிறது.