சவுதி அரேபியாவின் Riyadh நகரில் உள்ள King Fahd விமான நிலையம் மீது சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு 12 பேர் பலியாகியும், 309 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
இது இந்த கிழமை Riyadh விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட 3ம் தாக்குதல். முனைய இரண்டு தாக்குதல்களுக்கும் 4 பேர் பலியாகி இருந்தனர்.
‘
இந்த ஏவுகணை தாக்குதலையும் ஈரான் சார்பு கூத்தி (Houthis) ஆயுத குழுவே செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதல் இரண்டு தாக்குதலையும் தாமே செய்ததாக கூத்தி கூறியிருந்தது. சவுதியும் கூத்தி மீது தாக்குதல்களை செய்து வருகிறது. தரப்புக்கும் இடையே நீண்டகாலமாக யுத்தம் இடம்பெறுகிறது.
சனிக்கிழமை மரணித்தோரில் 4 பேர் சவுதியினர், 2 பேர் பங்களாதேசத்தினர், அமெரிக்கா, ஜோர்டான், பலஸ்தீன், சிரியா, சூடான், எகிப்து ஆகிய நாட்டினர் ஒவ்வொருவர்.
King Fahd விமான நிலையம் தற்போது முற்றாக தடைப்பட்டு உள்ளது.
