கடந்த மாதம் அமெரிக்க சனாதிபதி ரம்ப் NATO நாடுகளின் அமர்வு ஒன்றுக்காக துருக்கி சென்று இருந்தார். ஆனால் துருக்கியில் இருந்து திரும்பும் பொழுது இவரின் விமானத்தை ஈரான் தாக்கக்கூடும் என்பதால் இவர் சாப்பாட்டு கதவால் வேறு ஒரு விமானத்துக்கு சென்று நாடு திரும்பியுள்ளார்.
சனாதிபதி ரம்ப் கட்டார் அவருக்கு அன்பளிப்பு செய்த விமானத்திலேயே துருக்கி சென்று இருந்தார். ஆனால் ரம்ப் நாடு திரும்ப அமெரிக்காவின் வழமையான Air Force One என்ற விமான பயன்படுத்தப்பட இருந்தமை அறிவிக்கப்பட்டது. இது முதலாவது பாதுகாப்பு தொடர்பான விமான மாற்றம்.
விமான மாற்ற அறிவிப்புக்கு ஏற்ப ரம்ப் பதிக்கையாளர், ஊழியர் முன்னிலையில் Air Force One விமானத்தில் ஏறினார். அவருடன் பயணிக்கவிருந்த வெள்ளை மாளிகை ஊழியர்களும், பத்திரிகையாளரும் கூடவே Air Force One விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
Air Force One ஏறிய அனைவரையும் தமது யன்னல்களை மூடும்படி பணிக்கப்பட்டது.
யன்னல்கள் ஊடாக எவரும் பார்க்க முடியாத நிலையில் ரம்ப் இரகசியமாக Air Force One விமானத்தில் உணவு ஏற்ற பயன்படும் catering கதவு ஊடாக உணவு காவும் வாகனம் சென்று, அங்கிருந்து நழுவி, C-32A வகை அமெரிக்க இராணுவ விமானம் ஒன்றில் பிரித்தானியா சென்றுள்ளார். இது இரண்டாவது விமான மாற்றம்.
இப்போது நாடகம் மேலும் சூடு பிடிக்கிறது…
Air Force One விமானம் பிரித்தானிய Mildenhall விமானப்படை தளத்தில் இறங்கி 20 நிமிடங்களின் பின் Air Force One விமானத்தில் வந்த பத்திரிகையாளருக்கு ரம்ப் Air Force One இல் இருந்து இறங்கும் காட்சியை படம் பிடிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதென்ன மாயமடா, துருக்கியில் இருந்து C-32A விமானத்தில் பறந்து வந்தவன் பிரித்தானியாவில் Air Force One விமான கதவால் இறங்குகிறான்? இரகசியம் அந்த 20 நிமிடங்களுள் ஒளிந்து உள்ளது.
அதைவிட கேவலம் Air Force One ஏவுகணையால் தாக்கப்படலாம் என்ற நிலையில், அது மேலேறுவதை தடுக்காது தான் மட்டும் தப்பி, பதிக்கையாளரையும், வெள்ளை மாளிகை ஊழியரையும் பலிகொடுக்க முன்வந்தவன் அமெரிக்க சனாதிபதி ரம்ப்.
