சிறிய கனேடிய பாடசாலை வன்முறைக்கு 10 பேர் பலி 

சிறிய கனேடிய பாடசாலை வன்முறைக்கு 10 பேர் பலி 

கனடாவின் British Columbia மாநிலத்தில் உள்ள Tumbler Ridge என்ற சிறு நகரின் Tumbler Ridge Secondary பாடசாலையில் செவ்வாய் இடம்பெற்ற  வன்முறைக்கு 7 பேரும், சந்தேக நபரும், அப்பகுதி வீடு ஒன்றில் மேலும் இருவரும் பலியாகி உள்ளனர்.

அத்துடன் மேலும் 27 பேர் வரை காயப்பட்டும் உள்ளனர். சந்தேகநபர் தன்னை தானே காயப்படுத்தி மரணமானதாகவும் கூறப்படுகிறது.

பலியானோர் விபரங்கள், சந்தேக நபரின் விபரங்கள், தாக்குதலுக்கான நோக்கங்கள் என்பன இதுவரை போலீசாரால் வெளியிடப்படவில்லை. ஆனாலும் சம்பவ நேரத்தில் ஒரு பெண் சந்தேக நபர் என்றே செய்திகள் வெளியாகி இருந்தன.

சுமார் 2,400 பேரை மட்டும் கொண்ட இந்த சிறு நகரில் உள்ள இந்த பாடசாலையில் 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 160 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.