ஜப்பானில் சிறுவர் Diaper தயாரிப்பை நிறுத்தி முதியோர் Diaper தயாரிப்பு

ஜப்பானில் சிறுவர் Diaper தயாரிப்பை நிறுத்தி முதியோர் Diaper தயாரிப்பு

இதுவரை சிறுவர்களுக்கான diaper தயாரித்து வந்த ஜப்பானின் Oji Nepia என்ற நிறுவனம் தாம் அப்பணியை நிறுத்தி, முதியோருக்கான diaper தயாரிப்பில் மட்டும் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு காரணம் ஜப்பானில் குழந்தைகள் பிறப்பது குறைந்து, முதியோர் தொகை வேகமாக அதிகரிப்பதே.

2001ம் ஆண்டு 700 மில்லியன் diaper களை தயாரித்த Oji தற்போது சந்தையின் அளவு குறைவதால் ஆண்டுக்கு 400 மில்லியன் diaper களை மட்டுமே தயாரிக்கிறது.

2023ம் ஆண்டு ஜப்பானில் 753,631 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இத்தொகை 2022ம் ஆண்டுக்கான தொகையுடன் ஒப்பிடுகையில் 5.1% குறைவு.

1970ம் ஆண்டுகளில் இங்கு ஆண்டுக்கு 2 மில்லியன் குழந்தைகள் பிறந்திருந்தனர்.

தற்போது ஜப்பானின் சனத்தொகையின் 30% மக்கள் 65 வயதுக்கும் அதிகமானோராக உள்ளனர். அத்துடன் 10% மக்கள் 80 வயதுக்கும் அதிகாமானவர்களாக உள்ளனர்.