சீனாவின் அம்பாந்தோட்டை துறைக்கு புதிய வருமானம்

சீனாவின் அம்பாந்தோட்டை துறைக்கு புதிய வருமானம்

செங்கடலில் செல்லும் கப்பல்களை கூதி ஆயுதக்குழு தாக்குவதால் சீனாவின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்று முதல் புதிய வருமானம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகமும் உலகின் பெரியதோர் கொள்கலன் காவும் கப்பல் நிறுவனமான MSC யும் இந்த துறைமுகத்தை கொள்கலன் பரிமாறும்  துறைமுகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

அதன்படி ஐரோப்பாவின் Rotterdam துறைமுகத்தில் பயணத்தை ஆரம்பித்து, ஆபிரிக்காவை சுற்றி வந்த MSC Ingrid என்ற கப்பல் இன்று 9ம் திகதி 500 கொள்கலன்களை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளது.

இந்த 500 கொள்கலன்களை இன்னோர் MSC கப்பல் 16ம் திகதி டுபாய்க்கு எடுத்து செல்லவுள்ளது.

செங்கடல் முடங்கியதால் கொழும்பு துறைமுகத்தின் வர்த்தகமும் 30% ஆல் அதிகரித்துள்ளது.