Radar தொழில்நுட்பத்தை முறியடிக்க வந்த Radar Jamming தொழில்நுட்பத்தை முறியடிக்க சீனா AI Radar தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ளது. இந்த நுட்பம் சீனாவின் ஆகஸ்ட் மாத Information Research வெளியீட்டில் வெளிவந்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகளாக பாவனையில் உள்ள ரேடார் (RADAR: Radio Detection and Ranging) தொழில்நுட்பம் முதலில் பொதுமக்கள் சேவைகளுக்கு பயன்பட்டு வந்தது. கண்ணனுக்கு தெரியாத தூரத்தில் பயணிக்கும் விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றின் தூரங்கள், வேகங்கள் ஆகியவற்றை அறிய ரேடார் பயன்பட்டது.
ஆனால் பின்னர் இது இராணுவங்களாலும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. இது எதிரி விமானங்களின் வருகையை அறிந்து, வழிமறித்து தாக்க உதவியது.
அதனால் Radar Jamming நுட்பம் இராணுவங்களால் பயன்படுத்தப்பட்டது. இது யுத்த விமானங்கள் எதிரியின் ரேடாரில் அகப்படாது மறைந்து பறக்க உதவியது.
தற்போது சீனா Radar Jamming நுட்பத்தை முறியடிக்க AI Radar நுட்பத்தை தயாரித்து உள்ளது. இந்த நுட்பம் எதிரி யுத்த விமானங்கள் மறைந்து வந்தாலும் காட்டிக்கொடுக்கும்.
இந்த நுட்பம் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன யுத்த விமானங்களில் இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே அண்மையில் பல இந்திய யுத்த விமானங்களை பாகிஸ்தான் விமானங்கள் இலகுவில் சுட்டு வீழ்த்தின என்று நம்பப்படுகிறது.
 
									