சீனாவில் இருந்து ஈரான் பறந்த மர்ம விமானங்கள் 

சீனாவில் இருந்து ஈரான் பறந்த மர்ம விமானங்கள் 

கடந்த வெள்ளி 13ம் திகதி இஸ்ரேல் ஈரானை தாக்கிய பின் பல பொருட்களை காவும் மிகப்பெரிய Boeing 747 வகை cargolux விமானங்கள் 15ம், 16ம், 17ம் திகதிகளில் சீனாவில் இருந்து ஈரான் சென்றுள்ளன. இந்த மர்ம விமானங்கள் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குழம்ப வைத்துள்ளன.

Flight CLX 9877 போன்ற cargolux நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து Luxembourg செல்வதாக அடையாளமிட்டு பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் பின் இவை Kazakhstan, Uzbekistan, Turkmenistan ஆகிய நாடுகளுக்கு மேலால் பறந்து, ஈரானுள் நுழைந்து மறைந்துள்ளன.

இந்த விமானங்கள் Luxembourg நோக்கி தமது பயணத்தை தொடரவில்லை.

வாடகைக்கு அமர்த்தப்படும் Cargolux (cargo) விமான சேவை Luxembourg ஐ தளமாக கொண்டது.