அமெரிக்க, சீன, ரஷ்ய தலைவர்கள் அடுத்த கிழமை சீனாவின் ஒன்றாக அமர்ந்து சில பிரதான விசயங்களை கதைக்கவுள்ளனர். மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒரு அமர்வில் இருப்பது இதுவே முதல் தடவை.
ஆனாலும் இந்த உரையாடல் எதையும் சாதிக்கப்போவது இல்லை.
மேற்படி 3 பேரும் சீனாவில் இடம்பெறவுள்ள APEC அமர்வுக்கு செல்கின்றனர். அப்போதே இவர்களுள் சந்திப்பும் இடம்பெறுகிறது. பூட்டின் ICC ஆல் கைதுக்கு அறிவிக்கப்பட்டவர்.
அமெரிக்க mid-term தேர்தலில் படுதோல்வி அடைந்த ரம்ப் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். ஆனால் பூட்டினும், சீயும் அவ்வகை அவசரத்தில் இல்லை.
ரம்ப் அணுவாயுத கட்டுப்பாட்டை மீண்டும் நடைமுறை செய்ய விரும்புகிறார். முன்னர் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மட்டும் இருந்த அணு ஆயுத கட்டுப்பாட்டுள் இம்முறை சீனாவையும் உள்வாங்க முனைகிறார் ரம்ப்.
ரஷ்யாவிடம் 5,500 வரையான அணு குண்டுகளும், அமரிக்காவிடம் 5,200 வரையான அணு குண்டுகளும் இருக்கையில் சுமார் 600 அணு குண்டுகளை கொண்ட சீனா தற்போதைக்கு அணு ஆயுத கடுப்பாடுகளு உட்பட விரும்பாது.
