செப்டம்பர் 3ம் திகதி சீன தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ள சீன படைகளின் அணிவகுப்பை சீன சனாதிபதி சீயுடன் ரஷ்ய சனாதிபதி பூட்டினும், வடகொரிய சனாதிபதி கிம் ஜொங் உன்னும் கூட்டாக பார்வையிட உள்ளனர்.
இந்த சந்திப்பு பூட்டின் மீதும், கிம் மீதும் சீக்கு உள்ள மேலதிக ஆதிக்கத்தை காட்டுகிறது. குறிப்பாக ரம்ப் சந்திக்க துடிக்கும் இருவரும் இலகுவில் பெய்ஜிங் செல்வது ரம்புக்கு மிரட்டலாகவே உள்ளது.
இதற்கு முன் 1959ம் ஆண்டே வடகொரிய தலைவர் சீனா சென்று சீன இராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
கிம்மை தான் மீண்டும் சந்திக்க விரும்புவதாக ரம்ப் சில தினங்களுக்கு முன்னரே கூறியிருந்தார். அதே கிம் சீயால் இலகுவில் பெய்ஜிங் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த அணிவகுப்பில் சீனா பல புதிய இராணுவ தளபாடங்களை பார்வைக்கு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே காலத்தில் இந்திய பிரதமர் மோதி சீனாவில் இருப்பார் என்றாலும், மோதி சீன இராணுவ அணிவகுப்பை பார்வையிடார்.