இந்த ஆண்டுக்கான BRICS நாடுகளின் அமர்வு பிரேசில் நாட்டு Rio de Janeiro நகரில் இடம்பெறுகிறது. முதல் தடவையாக இம்முறை சீன சனாதிபதி சீ BRICS அமர்வில் கலந்துகொள்ளவில்லை. பதிலுக்கு சீனாவின் இரண்டாம் இடத்தில் உள்ள Premier Li Qiang அமர்வில் கலந்து கொள்கிறார்.
சீ கலந்து கொள்ளாமை பலருக்கும் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. அவர் நோய்வாய்ப்பட்டு உள்ளாரா, அல்லது விரைவில் ரம்ப் அறிவிக்கவுள்ள சீனாவுக்கு எதிரான வரிகளுக்கு சீனாவை தயார் செய்ய நாட்டில் தங்கியுள்ளாரா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டு BRICS எந்தவொரு பாரிய இணக்கங்களை அறிவிக்கும் நோக்கில் இல்லை. அத்துடன் பல BRICS நாடுகள் தாம் எவ்வகையில் ரம்பின் வரி தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று அறிய காத்திருக்கின்றனர்.
BRICS நாடுகளின் அமெரிக்க டாலர் பாவனையை குறைக்கும் முயற்சியும் பெரும் பரபரப்பு இன்றியே செய்யப்படுகிறது.
ICC யின் கைது அழைப்பில் உள்ளதால் ரஷ்ய சனாதிபதி பூட்டின் இணையம் மூலம் இணையவுள்ளார். இந்திய பிரதமர் மோதி நேரடியாக இணைகிறார்.