சீன சனாதிபதி சீ திங்கள் வட கொரியா பயணிக்கிறார் என்று இன்று வெள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சீ வட கொரியாவில் திங்கள் 8ம் திகதியும், செவ்வாய் 9ம் திகதியும் தங்கியிருப்பார்.
இந்த ஆண்டு ரம்ப், பூட்டின் உட்பட 17 நாடுகளின் தலைவர்கள் சீனா சென்று சீயை சந்தித்திருந்தாலும் சீ இந்த ஆண்டு வெளிநாடு ஒன்று செல்வது இதுவே முதல் தடவை.
இந்த ஆண்டு சீனாவும், வட கொரியாவும் 1961ம் ஆண்டு செய்து கொண்ட Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance இணக்கத்தின் 65 ஆண்டு நிறைவு காலம் என்றாலும் சீயின் திடீர் பயண அறிவிப்புக்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.
அமெரிக்க சனாதிபதி ரம்பும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் அண்மையிலேயே பெய்ஜிங் சென்று சீயை சந்தித்திருந்தனர்.
இதற்கு முன் 2019ம் ஆண்டு சீ வட கொரியா சென்றிருந்தார்.
