சீனாவின் BYD என்ற electric கார் தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த Yangwang U9 Xtreme என்ற கார் UAE யின் அபுதாபியில் நகரில் (E11 motorway) நடைபெற்ற போட்டியில் 503.17 km/h வேகத்தை அடைந்து உலக சாதனை செய்துள்ளது. அதனால் உலகில் 500 km/h வேகத்துக்கும் மேலான வேகத்தில் பயணித்த கார் இதுவாகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த காரின் முன்னைய தயாரிப்பு ஜேர்மனியில் இடம்பெற்ற போட்டியில் 496.22 km/h வேகத்தை அடைந்திருந்தது.
இந்த கார் 1,200 Voltage மின்சாரத்தில் இயங்குகிறது. இதில் உள்ள 4 electric motor கள் 2,977 hp (2,220 kW) சக்தியை வழங்குகின்றன.
மொத்தம் 30 Yangwang U9 Xtreme கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
உலகின் அதிவேக தயாரிப்பு கார்கள்:
1) Yangwang U9 Xtreme (electric car): 503.17 km/h
2) Bugatti Chiron Super Sport 300+ (petrol): 490.48 km/h
3) Bugatti Tourbillon: 444 km/h
