ஈரான் யுத்தம் காரணமாக பிற்போடப்பட்ட அமெரிக்க சனாதிபதி ரம்பின் சீன பயணம் வரும் மே மாதம் 14ம், 15ம் திகதிகளில் இடம்பெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. ஆனால் அதற்கு முன் ஈரான் யுத்தம் முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே.
இந்த பயணம் தடையின்றி நிகழ்ந்தால் இது ரம்பின் 8 ஆண்டுகளின் பின்னான சீன பயணமாகும்.
ரம்ப் தனது பயணத்தை ஏற்கனவே “Historic Visit”, “Monumental Event” என்று புகழ ஆரம்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் ரம்ப் ஏனைய நாடுகள் மீது பெருமளவு இறக்குமதி வரியை திணித்து, அதை ‘பிடி’ வைத்து வர்த்தக பேச்சுக்களை செய்திருந்தார்.
ஆனால் பெப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரம்பின் இறக்குமதி வரிகள் சட்டத்துக்கு முரணானவை என்று தீர்ப்பு அளித்ததால் தற்போது ரம்ப் சீனா உட்பட ஏனைய நாடுகளுடன் ‘பிடி’ இன்றியே பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
