சுமார் 200,000 B1, B2 விசாக்களை பறிக்கவுள்ளது அமெரிக்கா

சுமார் 200,000 B1, B2 விசாக்களை பறிக்கவுள்ளது அமெரிக்கா

சுமார் 200,000 பேருக்கு வழங்கிய non-immigrant விசாக்களை அமெரிக்கா திருப்பி பறிக்கவுள்ளது. இவர்கள் அகதிநிலை கேட்டமையே இவர்களின் விசா பறிப்புக்கு காரணமாகும்.

இவர்கள் 2016ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலத்தில் வர்த்தக நோக்கில் அமெரிக்கா செல்வோருக்கு வழங்கப்பட்ட B1 விசா அல்லது உல்லாச பயண நோக்கில் செல்வோருக்கு வழங்கப்பட்ட B2 விசா பெற்று அமெரிக்கா சென்று பின் அகதி நிலை கேட்டுள்ளனர்.

இவர்களின் B1 அல்லது B2 விசா பறிக்கப்பட்டாலும் அகதி நிலை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உள்ள இவர்கள் உடனே தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்படார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்நிலை தீடீரென மாறலாம்.

புதிதாக B1, B2 விசாக்களுக்கு விண்ணப்பம் செய்வோரிடம் அகதிநிலை கேட்கமாட்டேன் என்ற உறுதி மொழியும் தற்போது பெற்றுக்கொள்ளப்படுகிறதாம்.